மணநாள்

இந்த நாள் என்வாழ்வை
மாற்ற வந்த மணநாள்
நான் அவளுக்கான நாள்
அவள் என் உயிரான நாள் !!!
என்னவளுக்காக என்னை தோற்பதில்
அலாதி ஆனந்தம் எனக்கு
அவள் முறைப்பதுகூட வலிக்கிறதே ?
செல்ல அடிகள் சின்னசண்டைகள்
என்ன வலியிது?நேற்றைய
கனவுபோல் ஓராண்டு வாழ்க்கை !
இந்நாளின் நூறு அகவைக்கு
பின்னும் என்னவளின் கைத்தடியாய்
நான்மாற அவளது பிடிகூட
சுகம்தான் எனக்கு ! அவளின்
இன்பமே எனது வாழ்க்கை
என்வாழ்க்கை அவள் பிடியில் !!!

எழுதியவர் : வீரா ஓவியா (3-Oct-13, 1:50 pm)
Tanglish : mananaal
பார்வை : 153

மேலே