நானும் மனிதன்தான்
பகலில் மவுன விரதம் இருக்கும்
ஆந்தை
பதுங்கியே அடங்கி இருக்கும்
கொடும்புலி
பாயக் காத்திருக்கும் செடி மறைவில்
விஷப் பாம்பு
கூட்ட நெரிசலில்
நகரத்தில் நான்.............
விலகியும் நெருங்கியும்
வித்தியாசமான உருவங்கள்........
தெய்வமும் அங்கே நிச்சயமாக இருக்கும்......!
நிச்சயமாக எச்சரிக்கையாக..........