""""மருமகளே என்னையும் கொன்றுவிடு""""....

ஆசை ஆசையாய் பெற்றெடுத்த ஒத்தை மகன்
தேடித் தேடி பெண்ணெடுத்தேன்...
உன்னைக் கண்டெடுத்தேன்...
வெளியூரில் வேலையின்னு
கிளம்பிட்டான் என் மகன்...
துணைக்கு வேணும்ன்னு
கூட்டிப்போனா என் மருமகள்...
நாங்களும் தான் சந்தோஷத்தில்..
புத்தி மழுங்கித்தான் போனோம்...
மாசம் முடிஞ்சதும்...
மறுவீடு போய் திரும்பியவள்...
நல்லாத்தான் பறிமாறினாள் பழைய கஞ்சி
தண்ணீர் கேட்டாலும்...
தரைதட்டி விழுந்தது பாத்திரம்...
தரமாத்தான் வந்தது பேச்சும்...
இத்தணையும் தெரியாமத்தான் திரிந்தான்...
பொண்டாட்டி மயக்கத்துல என் மகன்...
நாளும் போச்சு கூடவே...
என் துணையின் உடலும் போச்சு சேர்ந்து உயிரும் போச்சு...
நாளு நாள் கழிச்சு என் மகன் கேட்டான்
"உனக்கு என்ன வேணுமுனு"
மருமகளும் வார்த்தையில் கேட்டாள்
"சொல்லுங்க அத்தைனு"
மெளனம் மட்டும் பதிலாய்
மனம் மட்டும் புலம்பியது
"""என்னையும் கொன்றுவிடு மருமகளே""""......