சாலையோரமாவது எனக்கு உதவட்டும்
கடந்து சென்ற காலங்கள் மனதை வருட
கடக்கின்ற காலங்கள் மனதை வர்ணிக்க
கடக்கப்போகும் காலங்கள் காலதலுடன் கைகுழுக்க
கல்லூரியை விட்டு விடைபெற்று வந்தேன்.-என்றாலும்
ஏனோ ஒரு இனம் புரியாத சோகம்……….
நான் அடைந்த துன்பங்கள் எத்தனையோ அதனை விட
மேலான இன்பங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி விட்டு
தமக்கு எதுவுமே தெரயாது என ஒய்யாரமாக
இருக்கும் ஆசான்கள்!
காலம் கடந்து செல்கிறது இருந்தாலும் மீண்டும் ஒரு முறை
என் உறவுகளைப் பார்க்க வேண்டும்.
நீங்கள் வகுப்பறையிலோ அல்லது அதன் அருகிலோ இல்லை
இருந்தாலும் ஒவ்வெரரு சனிக்கிழமையும்- என்
கல்லூரி அருகே நடந்து சென்று கால் பதிக்கின்றேன்.
நாளை மறுதினம் உங்களை புதிதாக நாடி வரும் மணவர்கள் மத்தியில்!
சாலையோரம் ஆவது என்னை உங்களுக்கு நினைவுபடுத்தும்
என்கிற தவிர்க்க முடியாத நப்பாசை தான்.
ஏனென்றால் கடந்து வந்து விட்ட காலங்களில்
கல்லூரியை விட்டு கலைந்து சென்றது நான் மட்டுமே
தவிர என்னுடைய நினைவுகள் அல்ல……
நினைவுகளுடன் பிரிவுகளுடனும்
கலைந்து செல்லும் இவள் யாரோ???????