மறக்க நினைக்கும் நினைவுகள்
தொலைந்து விட்ட என் காலங்களின் சில தூறல்களை
மீட்டிப்பார்க்க முற்படும் நண்பா உனக்கு
எத்தனை தடவை சொல்லியும் புரியவி;ல்லை
மரணித்துப் போன என் மனித வாழ்க்கை
மரணி;த்ததாகவே இருக்கட்டும்,
நீ எனக்கு நண்பனாக இல்லாவிட்டாலும்
ஏற்றுக்கொள்ளுகிறேன் - ஆனால்
தயவு செய்து என்னை நட்பு எனும் வலையில்
பிடித்து வேடிக்கை பார்க்காதே,
நான் ஏற்கனவே மரணித்து விட்டேன்
மீண்டும் என்னைக் கொல்வதில் உனக்கென்ன லாபம்?
உள்ளம் வெதும்புகிறது, இருந்தும்
பயனில்லை, மறக்க நினைக்கும் என்
நினைவுகளையும்!
நினைக்க மறுக்கும் என் வாழ்க்கையினையும்
மறக்க வழி செய்யா விட்டாலும் பரவாயி;ல்லை
நினைக்க வழி சமைக்காதே!
முரணித்துப் போனது மரணித்ததாகவே இருக்கட்டுமே?