​இனிய காலைப் பொழுது ​

​கீழ்வானம் கிழித்து வந்தான்
கிழக்கில் உதிக்கும் சூரியன் !
பனியில் நனைந்த புற்களும்
நிமிர்ந்து நவின்றன வணக்கம் !

உறங்கியும் உறங்காமல் நின்ற
மரங்களும் விரிந்தன ஒளியால் !
நடைபயிற்சி ஆங்காங்கே சிலர்
நடைபாதையில் எழாமல் பலர் !

காலைத் தென்றல் தொட்டது
கால் முதல் தலைவரையில் !
கலைந்த கேசமுடன் பலரும்
களைப்பு நீங்கிடாத சிலரும் !

புலரும் பொழுது இனித்திட
மலரும் காலை மகிழ்ந்திட
விடியும் நேரம் குறையின்றி
நிறைவும் நிலைத்து வாழ்க !

பழனி குமார்

எழுதியவர் : பழனிகுமார் (5-Oct-13, 10:35 pm)
பார்வை : 1224

மேலே