கண்ணாடி சுவருக்குள் என் சமூகம்

கடைக்குள் ....
வண்ண அலங்காரத்துடன் ....
கால்வலித்தாலும் நின்று கொண்டிருக்கிறது
என்றும்
ஒரு பொம்மை -விளம்பரத்திற்காக .......
வெளியில் ; வெயிலில்
கிழிந்த சட்டையுடன்
உட்கார்ந்திருக்கிறான் -ஒருவன்
காலணிகளின் காவலாய்
கண்ணாடி சுவரால்
பிரிக்கப்பட்ட வித்தியாசத்தில் இவர்கள்.
உடையும்போது
வீதியில்
தூக்கி எறியப்படும்
அந்த அழகான பொம்மை ;
பணம் வரும் நாளில்
கடைக்குள் அங்கீகரிக்கபடுவான்
அந்த காலணி காவலனும் கூட.
அதுவரை அவர்களை பிரித்து காட்டும்
அந்த கடையின் கண்ணாடியின் சுவர்........
# குமார்ஸ் .

எழுதியவர் : kumars (6-Oct-13, 12:49 am)
பார்வை : 86

மேலே