பாரத தாய்க்கு நேர்ந்த கொடுமை

பாரதியே...நீயும் இதை பார்த்து
கொண்டு தானே உள்ளாய்.
மோகத்தை கொன்றுவிடு அல்லால்
என் மூச்சை நிறுத்திவிடு என்றாய்.
நாங்களும் கொன்றோம் மோகத்தை அல்ல
ஒரு பெண்மையை
டீசம்பர் 18,காமுகன் டெல்லியில்
வெறியாட்டம் நடத்திய நாள்..
பாரததாய்கே நேர்ந்த சோதனை அது.
ராமரும்,புத்தரும் வாழ்ந்த இப்பூமியில்
எத்தனை துன்பங்கள்..
பாரதியே காந்தியும் உன் அருகில்
தானே இருக்கிறார்.
நீ பெற்று தந்த சுதந்திரம் இது தானா?
நடுநிசியில் நகையுடன் சென்றால்
தான் விடுதலை என்றாய்..
இங்கு நடுநிசியும் இல்லை,நகையும் இல்லை
போனது கற்பும்,உயிருமே
இது தான் நீ பெற்று தந்த சுதந்திரமா..
சட்டமேதையையும் ஒரு கேள்வி
கேட்கத்தான் வேண்டும்.
உன் சட்டத்தில் இதற்கு யார் தண்டனை
தர வேண்டும், அதிகபட்சம்
உச்சநீதி மன்றம் அல்ல குடியரசு தலைவர்...
உங்கள் அனுமதியுடன் சட்டத்தை நாங்கள் திருத்துகிறோம்....
யார் அவனுக்கு தண்டனை கொடுப்பது ?
அந்த கொடூரண்களை பெற்ற தாய்
இல்லை தாய் இரக்கமுடையவள்..
அவனுடன் பிறந்த அக்கா தங்கை
இல்லை அவர்கள் பாசம் மிக்கவர்கள்
பின் அவனுக்கு தண்டனை தான் என்ன ?
காலம் வரும் அவனும் தந்தை ஆவான்
பெண் குழந்தைகளுக்கு...
தர்மம் வெல்லும்...
நல்லதை நினை.
01/01/13
மும்பை