சந்தனச் சிற்பி --ரசிகன் ---கல்பனா பாரதி

சந்தனம் உரைத்துப்
பூசிக் கொண்டிருந்தான்
ஒருவன்

வந்தவன்
கட்டையைக் கொடு
ஓர் அதிசயம் செய்கிறேன்
என்றான்
அழகு மிளிரும்
சிற்பமாக வடித்து
அவன் கையில் தந்தான்

சந்தனச் சிற்பியோ ? நன்று !
என்று சந்தனச் சிற்பத்தை
மீண்டும் கல்லில்
உரைக்கத் துவங்கினான்
ரசிகன் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (6-Oct-13, 9:39 am)
பார்வை : 287

மேலே