வலி(ஈழம்)

தமிழா !தமிழா!எங்கே இருக்கிறாய்
கதவுக்கு பின்னால் தூங்கிகொண்டிருக்கிறாயா?
அணுகுண்டு சத்தம் கதவை தட்டுதிறதே......
பாரத தாயின் விரல்கள் தலைகோத
நித்திரையில் நிதானமாய் விழிகள் தூங்குகிறதோ?
நிலத்தின் மடியில் தலைசாய உயில்
கேட்டு எங்கும் குரல்காய,நித்திரையும்
என்றோ அவர்களின் விழிகளில் புதையுன்டது.
உனக்கு எப்படி தெரியும்?
ஆரிராரோ ஆரம்பித்து உன்னை
அரவனைக்கின்றதே தாயின் தாலாட்டு!
குழந்தையின் அழுகுரல் விட
மரனத்தின் அழுகரல் அவர்களுக்கு அதிக பரிச்சயம்
எப்படி தோன்றும் ஆரிராரோ பாட?
கவலைகள் தீர்க்க உனக்கு உறவுகள் உண்டு,
கண்ணீருக்கும் அங்கே கவலை உண்டு
எப்போது அவர்களை விட்டு பிரிவது என்று!
காலம் உனக்கு அனுபவம் சொல்லும்
அங்கே காலமே புது அனுபவம் தேடி செல்லும்!
கடல் அதிசயம் நிறைந்த பொக்கிசம்
உன் கண்களுக்கு விரிந்த கண்காட்சி
அது மட்டும் தான் அவர்கள் கண்ணீரின் அத்தாட்சி!
பூக்களும் கடண் கேட்க்கும்
தாயின் ஸ்பரிசம் தான் உன் சுவாசம்
பூக்களே அனுமதிகேட்டு தான் இதழ்கள் விரிக்கிண்றன இங்கே
அவன் இதயம் மட்டும் சுதந்திரமாய் சுருங்கி விரிந்திடுமா?
தலைமுறை பற்றி தெரிந்துகொள்ள தடயம்
தேடும் தழிழர் பரம்பரையே
நிலம் உண்ட குருதியும் நிலைகொள்ளமல்
எடுத்துரைக்கும் , அவர்களின் காலக்கிறுக்கலை!
காகித்த்திலாவது இங்கே பெண்களுக்கு என்று
சிலரால் சட்டம் எழுதப்படுகிறது
காமத்தின் விளைச்சலில் அங்கே
பெண்களின் கற்ப்புத்தான் சூரையாடப்படுகிறது!
நிலாவை பார்க்க இரவுகள் வருவதும்
விடியலை சொல்ல ஜன்னல் கதவை
கதிரவன் தட்டுவதும் உனக்கு எழுதிவைக்கப்பட்ட சொந்தம் !
இங்கே யாழின் இசைகேட்டு இரவுகள் தூங்குவதும் இல்லை!
ஜன்னல் கதவை தட்ட இங்கே வீடுகளும் இல்லை!
விடியலென்று இதுவரை ஏதும்மில்லை!
துப்பாக்கியின் சத்தம் மட்டுமே முடிவின் எல்லை!
சொந்தங்களின் துயரங்கள் துடைக்க
நீங்கள் துணை நிற்க மறுத்தது ஏன்?
இவர்களின் தவறுதான் என்ன?
வரையறுக்கப்பட்ட விதி முறைகளை கொண்டு
வரைபடத்தில் இடம் மறைக்க நினைக்கும்
அதிகாரத்தின் சதிகாரர்களின் இடையில்
இவர்களின் தவறுதான் என்ன?
அகிம்சையில் ஆளுமை கேட்ட உடன்
அள்ளிதர ஆங்கிலேயரின் உடன்பிறப்பல்ல
அமைதியின் மொழி தெரியா ஊமைகள் !
இதில் இவர்களின் தவறுதான் என்ன?
அரசியல் அலையில் மிதக்க மறுத்ததால்
கரை சேர்த்து விடாமல் கலை செய்கிறேன்
என்று நயம் பேசும் நயவஞ்சகர்களுக்கு
இடையில் இவர்களின் தவறுதான் என்ன?
தமிழின் அடையாளம் அழிய
தலைமுறையின் உரிமை மறைய
தலைகொண்ட தலைவர்கள் முன்னால்
அகிம்சையில் விடை கேட்காமல்
வன்முறையில் கேள்வி கேட்டது இவர்கள் தவறா?
புத்தரின் கொள்கையில் சட்டத்திருத்தம்
கொண்டு வரநினைக்கும் நவீன புத்தர்களுக்கு
ஆதரவு தரும் சகோதர நாடே
உன் வயிற்றுப் பிள்ளை உன்னை பார்க்கிறான,கேட்கின்றன
பூக்களின் நடுவில் ஒரு பிறப்பு
புல்லின் மேல் நடைபழக்கம்
கடற்கரை காற்றின் சுவாசம்
மெத்தையில் தூக்கம், அதிகார தாக்கம்
ஆட்சி ஏற்றம்,இதுவல்ல நாங்கள் விரும்பும் தோற்றம்
நிலையான மாற்றம்,நிரந்தர தோற்றம்,
எங்கள் இறப்பின் முடிவிலாவது வீச வேன்டும்
பூவின் வாசம். உடன்பிறப்புகளே
முடிந்தால் கைக்கொடுங்கள்
எல்லாம் முடிந்த பின்னே வார்த்தை மட்டும் நீட்டாதீர்கள்!

எழுதியவர் : மதி (6-Oct-13, 9:42 am)
பார்வை : 97

மேலே