தாய்க்கு ஒரு தாலாட்டுக்கவி
அன்பைக் காட்டியவள் அம்மா நல் அமுதை ஊட்டியவள் என் அம்மா
இன்பம் அளித்தவள் அம்மா என் இதயம் நிறைந்தவள் அம்மா
உவகை தந்தவள் அம்மா நல ஊக்கம்
தந்தவள் என் அம்மா
எனைத் தாலாட்டி வளர்த்தவள் அம்மா எனைப் பாராட்டி மகிழ்ந்தவள் என் அம்மா
முதுமை அடைந்து விட்டாள் அம்மா இப்போது
எனக்கு குழந்தை ஆகி விட்டாள் அம்மா
தாலாட்டி வளர்த்த என் தாய்க்கு நல்
தாலாட்டுப் பாடிடுவேன்
முதுமைக் குழந்தைக்கு பல முத்தங்கள்
நான் தருவேன்
இளமையில் நான் அவளின் குழந்தை
முதுமையிலோ அவள் என் குழந்தை
முதுமை அடைந்ததால் அவளை
முதியோர் இல்லம் விடமாட்டேன்
எனை மடியில் வைத்து தாலாட்டிய என் தாயை
என் மடியில் வைத்து தாலாட்டிடுவேன்
அன்புடன் அரவனைப்பேன் என் அன்னையை அருவெருக்கமாட்டேன் அவள் முதுமையை
என் தாய்க்குப் பாடுவேன் தாலாட்டு
ஆராரோ ஆரிராரோ என் அன்னையே
ஆராரோ ஆரிராரோ நல் அமுதே
ஆராரோ ஆரிராரோ