சுதந்திர ஜோதி
கோட்டான்களின் முற்றுகையில்
கோட்டையின் மதில்கள் சரியுமா?
கார்முகில்களின் ஆர்பாட்டம் கண்டு
காட்டுபுலிகள் பதுங்குமா?
ஏகாதியபத்திய எச்சில்கள் பட்டு
எரிமலை அணையுமா?
சட்டங்களை கொண்டு விடுதலை தீயை
சாத்திவிட முடியுமா ?
காலம் வெல்லும் ஒரு திகதி!
காண்போம் ஈழத்தில் சுதந்திர ஜோதி

