காதல் வளர்த்தேன்
பட்டாம் பூச்சியின் மீது உன்
பாசம் வர என்
பாதங்கள் தேய்ந்திட
பட்டாம் பூச்சிகள்
பிடித்து தந்து =உன் மீது
காதல் வளர்த்தேன்!
நெற்றிக்கு குங்குமமாய் என்
நெஞ்சம் சொரிந்த குருதியை உன்
நெற்றிபொட்டில் நானிட்டு என்
நேசம் சொல்லி நான்
காதல் வளர்த்தேன்!
மண்ணில் உன் பாதம் பட்டால்
மாசுபடும் என்றெண்ணி
கைகளில் உன் பாதம் தாங்கி
காதல் வளர்த்தேன்!
உன்னோடு நானிருக்கவேண்டுமென்று
உன் பெயரின் பின்னால் என் பெயரிட்டு
கள்ளி செடிகளில் நானெழுதி தினம்
காதல் வளர்த்தேன்!