ஹைக்கூ ! ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !


திறந்துவிட்டும்
பறக்கவில்லை
சோதிடக் கிளி !

சுமந்து சென்றார்கள்
நிகழ்கால் பிணத்தை
வருங்கால பிணங்கள் !

உணர்த்தியது
நிலையாமை
உதிர்ந்த இலை !

முகத்திற்கு அழகு
செலவில்லா நகை
புன்னகை !

சிதறிய தங்கம்
அல்ல முடியவில்லை
அந்தி வானம் !

அதிர்வை ஏற்படுத்தியது
பேச்சைவிட
மவுனம் !

ஏமாறுவதில்லை
வண்டுகள்
செயற்கைப் பூ !

சுமாரானவளும்
அழகிதான்
காதலனுக்கு !

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Oct-13, 7:06 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 71

மேலே