+குரங்காகிவிடுவோம்...!+
மனிதன் குரங்கிலிருந்து வந்தது போல
மீண்டும் குரங்கானால் என்ன?
வீணாய் வரும் வாய்ச்சண்டை அழியும்!
சாதிமத பேதம் ஒழியும்!
தனிக்குடும்பம் கலைந்து
கூட்டுக்குடும்பமாவது செழிக்கும்!
எல்லோரும் ஓரினமாய் இருப்பதால்
உலகில் தீவிரவாதம் கூட ஒழிந்துவிடும்!
இத்தனை நன்மை பயக்கும்
குரங்கினமாய் ஆனால் தான் என்ன!
தனக்குள்ளேயே அழிந்துவீழும் இந்த மனிதஇனம்!