அவர்கள்
அவர்களைப் பற்றி
யோசிக்க,
அவர்களில்
ஒருவனாய் அல்லது
எவனாகவும் இருக்கலாம்......
என்பதை
அவர்களைப் பற்றிய
சிந்தனையில்
சிதறிக் கிடக்கும்
கோபம், தாபம்
உரிமை, உண்மை
எதைக் கொண்டு
வேண்டுமானாலும்
புரியலாம்... உணரலாம்......
எதுவாய் இருந்தால்
அவர்களாய்
பார்க்க முடியுமோ,
அவைகளாய் இருப்பதில்
அவர்களாய்
இருக்க வேண்டிய
தூரத்தை
குறைக்கத் துவங்கிய
பயணத்தில்
சுவர்களால் ஆன
பாதையை உடைத்தலில்
உயிர் பெறுகிறது
அவர்களாய் ஆவது...........