புதைத்து வைக்காதே !!
புதைத்து வைக்க நான்
பொக்கிஷம் அல்ல உனது
நினைவுகள் … என்னை அழுத்த
அழுத்த உன்னில் அதிகமாவேன்
வேண்டாம் … உனக்கும் நான்
வேண்டாமெனில் விட்டுவிடு என்னை
வெளியில் .. நான் மட்டுமே
வாழ்வென நம்பி வாழும்
உயிர்களும் உண்டு … அங்கு
செல்வேன் நான் அமைதியாய்..!