சினிமா நூற்றாண்டு நேரம் இது: சினிமா 100 கேள்வி - பதில்கள்
1. "சிவகவி' படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் காட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
இருபத்தொன்பது
2. கே.ஆர்.ராமசாமி நடித்த முதல் படம் எது?
பூம்பாவை
3. நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அறிமுகமான படம்?
அமராவதி
4. எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த இந்தப் படத்தின் பெயர் என்ன?
எம்.எஸ்.சுப்புலட்சுமி
5. நடிகர் சிவகுமாரின் நூறாவது படம் எது?
ரோசாப்பூ ரவிக்கைக்காரி
6. "மனோகரா' திரைப்படத்தில் சிவாஜியின் தாயாக நடித்த இவர் பெயர் என்ன?
கண்ணாம்பா
7. நடிகர் ரவிச்சந்திரன், நடிகை காஞ்சனா இருவரும் அறிமுகமான படம் எது?
காதலிக்க நேரமில்லை
8. நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் நூறாவது படம்?
சிவந்த மண்
9. தமிழ்த் திரைப்பட உலகின் முதல் பெண் இயக்குநர் பெயர் என்ன?
டி.பி.ராஜலட்சுமி
10. பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில் - மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் எது?
முள்ளும் மலரும்
11. ஆண் வேடமேற்று கே.பி.சுந்தராம்பாள் நடித்த படம் எது?
நந்தனார்
12. எம்.ஜி.ஆர்.நடித்த முதல் படம்?
சதி லீலாவதி
13. "மாடர்ன் தியேட்டர்ஸ்' தயாரிப்பில் முதலில் வெளிவந்த படம்?
சதி அகல்யா
14. "சபாபதி' என்ற நகைச்சுவை படத்தின் கதாநாயகன் யார்?
டி.ஆர்.ராமச்சந்திரன்
15. கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான திரைப்படம்?
களத்தூர் கண்ணம்மா
16. ஜெமினியின் "அபூர்வ சகோதரர்'களில் கதாநாயகனாக நடித்தவர் யார்?
எம்.கே.ராதா
தொகுப்பு: த.சீ.பாலு, சென்னை