விவசாயியின் வியக்க வைக்கும் உணர்வு
விவசாயியின் வியக்க வைக்கும் கவிதை :
விடியும் பொழுது வருவது வெளிச்சத்திற்காக... இந்த
விவசாயி உழைப்பதோ உங்களின் பசிக்காக..!
நாங்கள் படிப்பில்லாமல் இருந்தாலும்...
நாட்டின் வளங்களுக்காக உழைக்கிறோம்..!
சின்ன சின்ன கிராமத்தில் விவசாயம் செய்தாலும்...
சிட்டி (City) எங்கும் எங்கள் விவசாய உணவு தான்..!
எங்களால் உங்கள் பசியுணர்வு நீங்குகிறது... உங்களால்
என் குடும்ப வறுமை விலகுகிறது..!
மாடுகளை வைத்து உழுகிறோம்... விவசாயம் வளம் பெற
மழை வர கடவுளை வணங்குகிறோம்..!
நிலம் வைத்து நெல் அறுவடை செய்கிறேன்...
நிம்மதியான இயற்கை காற்றை சுவாசிக்கிறேன்..!