உரக்கச் சிரித்தான் பிச்சைக்காரன்
தருமம் போடுங்க பிரபு !
ஆலய வாசலில்
பிச்சைக்காரனின் குரல்
வாசலில் கையேந்தி நிற்கிறாயே
உள்ளே சென்று கைகூப்பியதுண்டா ?
என்றான் வந்தவன்
மனிதனாவது தருவான் என்ற
நம்பிக்கையிருக்கிறது
கடவுள் தருவான் என்ற
நம்பிக்கை இல்லை என்றான் விரக்த்தியில்
உள்ளே இருப்பவர்களும்
கைகூபிவிட்டு கையேந்தித்தான் நிற்கிறார்கள்
இது வேண்டும் அது வேண்டும் என்று
ஆனால் உனக்கும் அவர்களுக்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
அவர்கள் பணமுள்ள பிச்சைக்காரர்கள்
நீ ஏழைப் பிச்சைக்காரன் அவ்வளவுதான்
GOT IT MY DEAR BEGGAR ?
OF COURSE SIR !
கற்கை நன்றே கற்கை நன்றே !
பிச்சை புகினும் கற்கை நன்றே !
யாரோ சொன்னது
கற்ற பின் பிச்சை புகுதல்
சாலவும் நன்றே !
நான் சொல்வது
DROP THE NICKEL
தரும பிரபு !
என்ன ஏதாவது நேர்ச்சையா ?
உரக்கச் சிரித்தான் பிச்சைக்காரன்
~~~கல்பனா பாரதி~~~