மகிழுங்கள் சிலகாலம்

இடம் -
ஒரு மலை நகரம் @சுவிஸர்லாந்த் ​


கொட்டிய முத்துச் சிதறலா
கட்டிய வீடுகளின் காட்சியா !
மலைமீது மாடி வீடுகள்
மாசு படியா விட்டங்கள் !
எழிலான விருந்து விழிகளுக்கு
என்றும் கலையாத ஓவியம் !
அரசியல் ஊர்வலம் இராது
போக்குவரத்தும் நிற்காது
சாதிக் கலவரம் வாராது
சச்சரவும் காண முடியாது
சென்று வாருங்கள் நீங்கள்
நன்று மகிழுங்கள் சிலகாலம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Oct-13, 6:48 am)
பார்வை : 1325

மேலே