அம்மா

பிறந்தது முதல்
இன்று வரை
அவளுக்கு
நான் செய்தது ஏதுமில்லை
என்னால்
அவள் அடைந்த
இன்பத்தை விட
துன்பமே அதிகம்
அதனால்தானோ என்னவோ
எனக்கு
துன்பம் வரும் போதெல்லாம்
அவளையே அழைக்கிறேன்
அம்மா என்று...!

எழுதியவர் : பந்தலராஜா (9-Oct-13, 10:51 am)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
Tanglish : amma
பார்வை : 62

மேலே