தாயாக மாற ஆசை....!

அலுவலகம் வந்ததிலிருந்தே
அவன் நினைவே...!

அதிகாலை எழுந்ததும்
அரை தூக்கத்தில்
அசையும் உன்னை
அணைத்த பிறகே
அடுத்த வேலை எனக்கு...!

உன் முகம்
சிரிக்கக்கண்டால்..!

என் மனம்
சில்லென்றாகும்...!

சிணுங்குமுனை
சிரிக்கவைக்க
சிறுபிள்ளையாய்
சில மணிநேரம்
சிதறியது...!

நேரமொதுக்கிய விளையாட்டை
நேரம்மறந்து விளையாடியதால்..!

நேரத்திற்கு வெளியே செல்லாமல்
நேரந்தவறி பேருந்து நிலையத்தில்....!

நிற்காமல்
பயணிக்கும்
நேரத்தை முந்திச்செல்ல ....!

நின்றுகொண்டு
பயணிக்கிறேன்
பேருந்தில்...!

நேரத்தை முந்த!....

வேகமாய் ஓடும் நேரத்தை
மெதுவாக கூடமுந்தமுடியாமல்
ஊர்ந்து வருகிறது பேருந்து,,,!

பின் ஓடத்தொடங்கினேன்
ஓட்டப்பந்தயத்தில் அல்ல
நேரப்பந்தயத்தில்...!

ஒருவழியாய்
வழிப்போக்கரின்
உதவியுடன்
உரித்த நேரத்தில்
அலுவலகத்தில்...!

இப்போதிருந்தே
மனம் ஏங்குகிறது
மாலைப்பொழுதை தேடி...!

இப்படிப்பட்ட வேளையில்தான்
மனைவியை கண்டு
மனம் பொறாமை கொள்கிறது....!

அவ மட்டும் நாள் முழுக்க
பிள்ள கூட சந்தோசமா இருக்க?????
கொடுத்து வெச்சவ?????

எழுதியவர் : பா.பரத் குமார் (9-Oct-13, 3:49 pm)
பார்வை : 462

மேலே