நூல்களோடு நாம்

விழி திற...
வெற்றி உனக்கு முன்
கொடியெடுத்து பறக்கிறது...
வருக இளைஞனனே... வருக!
நூலகத்திற்குள்...

நூலாகிய நான்....
கவிஞனின் பார்வையில்
நான் கவிச்சுரங்கம்....
ஆசிரியரின் பார்வையில்
நான் சிந்தனைச்சுடர்..
மாணவனின் பார்வையில்
நான் அறிவொளி...

தாய் போன்று வலி நடத்திடுவேன்..
தந்தை போன்று அறிவுரை கூறிடுவேன்...
ஆசிரியரை போன்று அறிவை வளர்த்திடுவேன்....
நண்பனைப் போன்று துணையாய் நின்றிடுவேன்....

எங்களின் சுரங்கம் 'நூலகம்'..
சில விநாடிகள் எட்டிப் பார்ப்பதற்க்கு
மட்டும் நூலகங்கள் அல்ல ....
நம்மை எட்டாத உயரத்திக்குக்
கொண்டு செல்வது நூல்களே...
மனிதனின் அறவு கண்களை
திறப்பதும் நூல்களே...
ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு
காரணமாய் இருப்பதும் நூல்களே...

எங்கே அறிவுத்தேடல் அதிகமாகுமோ
அங்கே நூல்கள் பரவலாகும்....

நாள்தோறும்
நல்ல நூல்களைப் படிப்போம்...
நாளும் வளர்வோம்.....

எழுதியவர் : கே.Neela (9-Oct-13, 3:20 pm)
பார்வை : 86

மேலே