சமூகப்பறவையே கேள்..!!!

ஒன்றும் எழுதக் காணோமே
எழுத்துக் கரு கிட்டாமல் முடங்கினாளோ...
நல்ல வேளை நாம் பிழைத்தோமென
பெருமூச்சு விடாதே சமூகப்பறவையே...

சற்று இளைப்பாறுகிறேன் அவ்வளவே...
..........!!!!!.....!!!!...
வன்முறைச்சிறகு விரித்து
சமூகஇயற்கைச்சிதைவு வானில்
சல்லாபமாய்ப் பறக்கும்
உன்நடவடிக்கை வெயிலில்
வேடிக்கைக் குளிர்காய்தல் என்வாடிக்கையோயென
எண்ணி எகத்தாளம் போடாதே சமூகப்பறவையே...

உன்நடவடிக்கை வெயிலால்
தலைமுடி தீப்பற்றி
அறிவு அடுப்புச் சூடேறி தன்மான
மண்டையோடால் சமைத்து
மென்று விழுங்கும்கஞ்சி வடிக்க
வேடிக்கை குளிர்காய்வு
உற்சாகப் படுத்தி விட்டால்....
சமூகப்பறவையே உனை
எழுத்தாணி விள(ல)ங்கு கைக்கொண்டு
குற்றவாளிச்சட்டத்தில் சிறைப்படுத்தி
தீ(தி)ட்டிடுவேன் தீ(தி)ட்டி....!!!

.... நாகினி

குற்றவாளிச்சட்டம்....இதில்
சட்டம் = ஃப்ரேம்/போர்டு (படம் பதிக்கும்/வரையும் பலகை)
சட்டம் =Law...
ஆகிய இரு பொருள் தருவதை மனதில்கொள்க....

எழுதியவர் : நாகினி (9-Oct-13, 5:51 pm)
பார்வை : 57

மேலே