வலி


ஒவ்வொரு
மணித்துளியும்
என் நினைவு நாளங்கள்
அத்தனையும்
உனக்காக
ஒதுக்கியிருந்தேன் !

ஒவ்வொரு
கத்திருப்புகளிலும்
கரைந்துபோன
காலங்களைபற்றி
கவலைப்படாமலிருந்தேன் !

எதிர்காலம்
என்ற கேள்விக்கு
நீ தான்
பதில் என்றிருந்தேன் !

உன் அருகமையே
என் வாழ்வின்
அளப்பரிய
ஆனந்தம்
என்றிருந்தேன் !

ஆனால்....
கண நேரத்தில்
என் காதலை
கசக்கி எறிந்துவிட்டு
சென்றுவிட்ட
உன்னால்
இன்று .....

கடந்துபோன
காலங்களை
எண்ணி
கவலையில்
ஆள்வதும்
நீயில்லா
எதிர்காலத்தை
எண்ணி
பேதலிப்பதுமாய்..!

என்
நிகழ்காலம்
பயணித்து
கொண்டிருக்கிறது !

உன்
நினைவுகளின்
வலிகளோடு ....!

எழுதியவர் : பகவதி செல்வம் (8-Jan-11, 11:09 am)
சேர்த்தது : Bagavathyselvam
Tanglish : vali
பார்வை : 572

மேலே