சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்

நானாக கேட்காமல்
நீயாக நெருங்கி வந்தாய்
இன்றும் நானாக சொல்லாமல்
நீயாக விலகிவிட்டாய்..

அன்புடன் தொடங்கியது
அன்பில்லாமல் முடிவதன் வலி
உனக்கும் தெரிந்திருக்கும் !

உன் மனதில் அன்று இருந்தது
வெறும் வேசமாக இல்லாமல்
பாசமாக இருந்திருந்தால்....
உன் போலித் திரையின் பின்
இன்றும் மறைந்திருக்கும்........!!

என்றோ ஒரு நாள்.....
அது என்றுமே இல்லை என்று
ஆகிவிட்டபின்னும்மீண்டும் சந்திப்போம்
என்ற நம்பிக்கையுடன்..........

எழுதியவர் : ரெங்கா (8-Jan-11, 2:10 pm)
சேர்த்தது : renga
பார்வை : 603

மேலே