உயர்திரு தமிழய்யா அவர்களுக்கு
"பயலே, கையெழுத்தை மாத்து
உன் தலையெழுத்து மாறும்"
அன்றே ஆருடம் சொன்னார்
மதிப்பென் குறையும்போது
பிரம்போடு அய்யனாராய் நிற்கும்
மதிப்பிற்குரிய தமிழய்யா.
தாய்க்கு நிகராய்
தாய்மொழி தந்தார்
தமிழில் கதை கவிதை
தரமான காவியம் தன்னிகரில்லா
தமிழ் இலக்கியத்தோடு
தமிழர்தம் வாழ்வியல் என்று
தனித்தனியே தமிழ் விதைத்தார்
இன்று அவ்விதைகளை
விளைவிக்கிறேன்
தமிழ் கவிதைகளாய்
வாழ்க்கை பயணத்தின் நீண்ட
இடைவெளியில் விழைகிறேன்
மீண்டும் உங்கள் வகுப்பறையில் நின்று
சத்தமாய் நான் உரைநடை படிக்க
வழக்கம் போல் நீங்கள் விளக்க வேண்டும்
உங்கள் தொலைந்த பிரம்பிற்க்கும்
எனக்கும் தொடர்பில்லை
என்பதை நினைவில் கொண்டு.
தமிழய்யா
உங்கள் நினைவுகளுக்கு
இந்த கவிதை ஒரு மலர்சென்டு..