!!!உனக்கு ஒரு மடல்!!!


உனக்கு ஒரு மடல் -என்னை
மறந்து விட்டாய் என்பதற்கு அல்ல
உன்னை உள் அன்போடு
நேசித்தேன் என்பதற்காக!

என் காதலுக்கு கருவாகி
கவிதைக்கு பொருளாகி
எனை காதலித்து
கவி தந்த காதலி-நீ
ஆதலால்

என் காதலை
இப்போது ஏற்க மறுத்தாலும்-என்
இதய வானிலே எப்போதும் -நீ
இளைய நிலா என்பதால்!

நாலாறு மாதங்கள்
உன் மீது நான் கொண்ட காதல்
ஏழு ஜென்மத்திலும்
மறவா உன் நினைவுகள் என்பதால்!

காதல் என்பது மாயை-என்ற
புரியாத புதிரை-எனக்கு
புரிய வைத்தாய்
என்பதற்கு அல்ல!

பாசங்கள் எல்லாம் வேசங்கள்
என்ற நிஜத்தை
எனக்கு சொல்லாமல் சொன்னவள் -நீ
என்பதால் இறுதியாக
உனக்கு ஒரு மடல்!

எழுதியவர் : நவநீதன் (9-Jan-11, 11:03 am)
சேர்த்தது : navaneethan navaratnam
பார்வை : 442

மேலே