என் கனவே கலையாதே ...
கண்டவை எல்லாம்
கனிவானவையே,
கனவுகளில்,
நான்
வாழ்ந்து விடுகிறேன்...
கலைத்து, என்னை தவிக்க விடாதே!
துரோகத்தை அங்கே,
ஏனோ துளி கூட காணவில்லை.
துன்பம் எல்லாம்
தொலை தூரத்தில்...
துயரம் எல்லாம்
நெருங்கவே பயந்தது...
நொருங்கிப் போனது
கனவுகளில்.
நான் மகிழ்ந்தே வாழ்ந்து
விடுகிறேன். காட்சிகளில்
நான் கலந்து
விடுகிறேன்...
ஏனோ, அங்கே
சந்தித்தவர்கள் எல்லாம்
ஏமாற்றவேயில்லை.
ஏங்கவும் விடவுமில்லை
தோள் சாய்ந்தேன்
தோழமையாய் ..
கரம் கோர்த்தேன்
எனக்கு மட்டும் உடையவனாய்
கண்களை
மூடியதும்,
ஏறிட்டுக்கூடப்
பார்க்க வில்லை கவலைகள் ...
விழி மலர்ந்தேன்
என் கனவுக்குள்
பார்த்த ஆத்மாக்கள்
கொண்டிருந்தன
குழந்தை மனமே!!!
கூப்பாடு போட்டுக் கொண்டே
கூவியழைத்தும்,
வஞ்சனை
அங்கே துளி கூட இல்லை
கனவுகளில் நான்
வாழ்ந்து விடுகிறேன்...
கற்பனையில் தவழ்ந்து
வாழ்கிறேன்.
தோழமை, பலவுண்டு
என்வாழ்வில்..
தோற்றே
போயின!!!
உறவுகள், பந்தங்கள்
என்னைஉறுத்தவே
செய்தன...
கண்டவை, நானவுலகில்
கசப்பான காட்சிகளே!
ஆனால் இது
தோற்றங்கள் தான்
புரிகிறது ....
கனவுகள் தான்
நனவில்லை
ஆனாலும்
உன்னிடம் ஒரு
உதவி கேட்பேன்...
கனவுகளில் நான்
வாழ்ந்து விடுகிறேன்..
காலத்தின் கோலத்தை,
கலைத்து நீயும்
என்னை கண்ணீரில்
தள்ளாடும் நினைவுகளில்
நிறுத்தாதே!!!!