என்ன செய்ய போகிறிர்கள் ?

காதல் .... காதல் ... காதல்

இல்லையேல் சாதல் என்று சொல்லி திரியும்

என் அன்பிற்குரிய தோழர்களே ....

உங்களோடு வாழ மறுக்கும் உறவிற்காய் ...

சாக துணியும் தோழர்களே....

உங்களுக்காய் வாழ்ந்து கொண்டிருக்கும்

உறவுகளுக்காய் நீங்கள்

என்ன செய்ய போகிறிர்கள் ? ...

எழுதியவர் : கலைச்சரண் (13-Oct-13, 1:46 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 64

மேலே