ஒரு காதலனின் திருமண வாழ்த்து மடல்
தண்ணிரில் குளித்த என்னை
கண்ணிரில் குளிக்க வைத்த
காதலியே.......
மரணத்தின் போதும்
மதிக்கெட்டு திரிந்தேன்
உன் பின்னாலே........
ஆனால் நீயே,
மறதியில் நடந்ததுபோல்
அதை மறந்து
மணமேடையில் நிற்கிறாய்
என் முன்னாலே.......
நீ வாழ்க
வளமுடன்
நான் வாழ்வேன்
உன் நினைவுடன்