manigndan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : manigndan |
இடம் | : perunagar |
பிறந்த தேதி | : 30-Jan-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 24 |
காந்தி இறந்த நாளில் தான் நான் பிறந்தேன். அதனால் தான் ஏனோ எனக்கே தெரியாமல் என் மனது அமைதியை விரும்புகிறது ....
உன்னை பாா்க்கும்போதெல்லாம்
என் முகத்தில் ஒரு புன்னகை
அதற்கு காரணம் கேட்கும்
உன்னிடத்தில் எவ்வாறு சொல்வேன்
என் வருங்கால துணைவி
இன்று, யாரோ போல
என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை
நினைத்து தான் என்று...
என் காதலை உணராத
என் காதலி.....
என் உணர்வை உணராத
என் உறவினர்......
அவர்களுக்கு மத்தியில்
என்னுடன் உரிமையாக
பழகும் உன் நட்பு
என்றுமே சிறந்தது தான்...
உன்னை பாா்க்கும்போதெல்லாம்
என் முகத்தில் ஒரு புன்னகை
அதற்கு காரணம் கேட்கும்
உன்னிடத்தில் எவ்வாறு சொல்வேன்
என் வருங்கால துணைவி
இன்று, யாரோ போல
என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை
நினைத்து தான் என்று...
உன் கயல் விழியை
காண நான் காத்து இருக்கிறேன்.
என்னை போல்
உன் கண்களும்
என்னை ரசிக்காத என்று...
இது புரியாதவர்...
என்னை பார்த்து சிரிப்பர்..
புரிந்தவர் என்னை
கண்டு மெய் சிலிப்பர்....
அவளை காதலித்தேன்....
நட்பை இழந்தேன்.....
கண்ணீரைக் கண்டேன்....
காதலை மறந்தேன்....
இழந்தாதும் கிடைக்கவில்லை....
இனி இழக்க போவதும்
என்னவென்று
எனக்கு தெரியவில்லை....
வாசம் இல்லா மலர்
ஒளி இல்லா சூரியன்
இருள் இல்லா நிலவு
இதைப் போல் வாழ்கிறேன்..
உன் துணையில்லா
என் வாழ்வில்.
பொது இடங்களில் முத்தமிட உரிமை கோரியும், கலாச்சார காவலர்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் போராட்டத்திற்கு
நீ என் அருகில் மட்டும் வந்துவிடாதே !
.................................+++++++++++++++++++
நீ என் அருகில் வந்தால்
எனக்குள் ஒரு புரியாத மாற்றம்
தேகம் எல்லாம் அனல் பறக்குது
உன்னை நினைத்தால் மனதுக்குள்
ஜில்லென்று மழை தூரல் வீசுது ..
உன்னைக் கண்டாலே கால்கள் எல்லாம்
தரையைத் தாண்டி தவிக்குது
மனதுக்குள்ளே ஆயிரம் குழப்பங்கள்
மழலைபோல் தட்டுத் தடுமாறுகிறேன்
பேச நினைத்தாலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை
கிடைத்த வார்த்தைகள் எல்லாம் உன்கிட்ட பேச
முடியவில்லை ...
உனைக் கடந்து போகையிலே
எனை மறந்து செல்கிறேன்
சொல்லவும் துணிச்சல் இல்லை
சொல்லாமல் விடவும் மனம் நினைக்க வில்லை
தெரிந்தோ தெரியாமலோ
உன்னை காதலித்துவிட்டேன்
ஆனால் இன்றோ
நான் தெரிந்தே
உன்னை மறக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்...
ஆனால்,
எனக்கே தெரியாமல்
உன்னை நினைக்கிறது
என் இதயம்....