காதலின் ஒவ்வொரு நிமிடமும்

நீ என் அருகில் மட்டும் வந்துவிடாதே !
.................................+++++++++++++++++++
நீ என் அருகில் வந்தால்
எனக்குள் ஒரு புரியாத மாற்றம்
தேகம் எல்லாம் அனல் பறக்குது
உன்னை நினைத்தால் மனதுக்குள்
ஜில்லென்று மழை தூரல் வீசுது ..
உன்னைக் கண்டாலே கால்கள் எல்லாம்
தரையைத் தாண்டி தவிக்குது
மனதுக்குள்ளே ஆயிரம் குழப்பங்கள்
மழலைபோல் தட்டுத் தடுமாறுகிறேன்
பேச நினைத்தாலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை
கிடைத்த வார்த்தைகள் எல்லாம் உன்கிட்ட பேச
முடியவில்லை ...
உனைக் கடந்து போகையிலே
எனை மறந்து செல்கிறேன்
சொல்லவும் துணிச்சல் இல்லை
சொல்லாமல் விடவும் மனம் நினைக்க வில்லை
சின்ன சின்ன சந்தோசம்
நீ எனை உன் கடைவிழியால்
எட்டி எட்டி பார்க்கின்ற போது
என்ன செய்வது கூட விளங்கவில்லை
விளங்கிய எதுவும் செய்யத் தோனவும் இல்லை
உன்னை பார்த்தவுடனே -யாரையும்
திட்டவும் தோனுதில்லை
பார்த்ததெல்லாம் புதிதாக தெரிகிறது
என் வீடு பாட்டியை கண்டால் கூட
மலர்களை பித்து பறிக்கவும் முடியவில்லை
மென்மையாகவே உணர்கிறேன்-நம்
காதலைப் போல
உன்னை நெருங்கி நெருங்கி
வரும் போது கால்கள் கூட
என் பேச்சைக் கேட்கவில்லை ..
கண்ககளின் புருவங்களிடையே
நீ அமர்ந்து கொண்டு -என்
கண்களுக்கு உனையே பார்க்க கட்டளை இடுகிறாய்
தனிமையை மட்டுமே -
கூட்டத்திலும் உணர்கிறேன்
இன்று சொல்கிறேன் -என்
மனதில் நீ என்று நுழைந்தாயோ
தெரியவில்லை
நுழைந்த உன்னை வெளியே அனுப்ப
எனக்கும் விருப்பமில்லை
உன்னோடு இல்லாவிட்டாலும்
உன் நினைவை மட்டும் என்னோடு அனுப்பு
காலங்கள் முழுவதும் -உன்
இதய வாசலில் பூக்கும் பூவாய் காத்துக்கிடக்கிறேன் ........