நல்ல நட்பு!

நல்ல நட்பு!

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தான்.
அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.
அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.
அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது .
அதற்க்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன்.
இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது
இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல்
அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.
கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது
அதற்க்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது .
இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்குகொள்ளவேண்டும்
அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.

- நன்றி! மு. சரளா

எழுதியவர் : கே இனியவன் (14-Oct-13, 4:33 pm)
பார்வை : 2239

மேலே