சுவரின் உள்வெடிப்பு!(ரோஷான் ஏ.ஜிப்ரி)
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு கொத்தனாரினதும்,
சித்தாளுடயதுமான
கடீன உழைப்பில்
எழுப்பப் பட்டது இச் சுவர்
ஆயினும்;மேற் பூச்சுடன்
முடிவுக்கு வந்திற்று அவர் தம் பணி!
பூசி மினுக்கப் பட்டதும்,
வெள்ளையடிக்கப் பட்டதுமாக
நீங்கள் பார்க்கும் சுவரினுள்
சூளையில் வெந்து உருகிப் பழுத்த
சிவந்த செங்கற்களின் நிறம்
மறைக்கப் பட்டிருக்கிறதென்று
உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
எந்த கேள்வி கணக்கும் இன்றி
தனது விளம்பரங்களை தொங்கவிட
ஆணிகளை அறைபவனுக்கு
சுவரின் வலியுணர நேரமிருப்பதில்லை!
வெற்றுக் காகிதத்தில்
தீட்டப் பட்டிருக்கும் ஓவியத்தை
பணம் என்று பல்லிளித்து
அது மட்டுமே வாழ்வென்றலைபவனுக்கு
சுவரின் உள் வெடிப்புகள்
வர்ணங்களால் நிரப்பத்தகு
ஒரு புள்ளி போன்றே புரிகின்றது.
வீட்டை அலங்கரிப்பதில்
காட்டும் கரிசனை
சுவரின் ஸ்த்திரம் பற்றி வருவதில்லை.
உங்களின் சுவர்களில்
வெடிப்புகள் இருக்கின்றதா?
கவனிப்புடன் கண்காணியுங்கள்
அத்தி வாரங்களையே
ஆட்டம் காண செய்வது-இந்த
வேதனைக்குரிய வெடிப்புகள்தான்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.