எம ஊர்வலம்

அலங்கோல பூமி
அந்நிய மண்ணாக
ஆதி தமிழனின் தலை
அறுக்கப்பட்ட பூமி..!

உறவு இறந்த சோகம்
மறக்கும் முன்
உடைவாள் உரச
நாக்கு அறுபட்டு
உதிரம் தெறிக்க
விழுந்த
தசை பிண்டங்கள்..!

சாவு எண்ணிக்கை
சண்டையில்
அரசியல்
தலைவர்கள்...

தலைமுறை
மாறாத
மவுன பீடம்,
மங்கையர் மார்பு
மறைத்து
பாலுட்ட,
பிஞ்சி குடிக்கும் முன்
தாயுடல் தரை
சாய்ந்தது
உதட்டு பால்
தெறிக்க...

பன்றி கூட்டங்களை
பாது காக்க
பசுமை படைகள்...
எம் மக்கள்
பசியாற
பல்லிளிக்க வைத்த
பாரதம்...

யமனிடம் கூட்டு
மிதம் மிஞ்சியவர்களை
காப்பாற்ற
நகர் ஊர்வலம்
காமன்வெல்த்
தலைவனாம்,
எம் தாய்மார்களின்
தாலி அறுத்த
வேசிமகன்...

ஆயுதங்களை
ஆழ்மனத்தில்
புதைதுள்ளோம்,
கண் மை தீட்டிய கை
கத்தி தீட்டும்
வெடித்து கிளம்பும்
சிங்களவன்
வேரறுக்க...

*****கே.கே.விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (15-Oct-13, 9:50 am)
பார்வை : 68

மேலே