திறவுகோல்

அறிவிற்கு திறவுகோல் புத்தகம்
ஆற்றலுக்கு திறவுகோல் சத்தியம்
அன்பிற்கு திறவுகோல் நட்பு
இதயத்தின் திறவுகோல் காதல்
இயற்கையின் திறவுகோல் காலைக் கதிரவன்
இளவேனிற் திறவுகோல் வீசும் தென்றல்
பூவிதழ் வாசல் திறவுகோல் புன்னகை
புன்னகையில் திறக்கும் இதய வாசல்
கற்பனையின் திறவுகோல் கவிஞன் கவிதை
கவிதை திறக்கும் எழுத்தில் அழகிய சொர்க்கம்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Oct-13, 9:32 am)
Tanglish : thiravukol
பார்வை : 286

மேலே