தாயின் கதறல்

என் சின்னஅறை கருவறையில் நீ வளர பத்தியம் கொண்டேன்
உன் மெல்ல அசைவுகளிலும் உதைகளிலும்
சிரித்துக்கொண்டேன்
இன்னல் கண்டப்போதிலும் உன்னைப் பெற இஷ்டம் கொண்டேன்
வலிக்கொண்டு உன்னை ஈய்டேன்
விழி உறங்காமல் உன்னை ரசித்தேன்

இன்று
என் செல்களின் வளர்ச்சில்தான் உன் உடல்
என் வலியின் முடிவில்தான் உன் மூச்சுக்காற்று
உயிர்க்கொடுத்த எனக்கு ஒருவேளை உணவளிக்க முடியவில்லை உன்னால்
உன் காலினால் எட்டி உதைக்கும் தருணங்கள்
நிரூப்பிக்கப்பட்டது "தொட்டில்பழக்கம் சுடுகாடுவரை "என்னும் பழமொழி

பேரக்குழந்தை கையசைக்க
உன் மனைவி முகம்சுளிக்க
நீ முகம் திருப்ப
நிம்மதி தேடி வீட்டுவாசல் தாண்டி
முதியோர் இல்லம் நோக்கிச் செல்கிறேன்
உன் போலிப் பிரியத்திற்கு பிரியாவிடைக்கொடுத்து கண்ணீருடன்...

எழுதியவர் : harihari (15-Oct-13, 9:32 pm)
Tanglish : thaayin katharal
பார்வை : 79

மேலே