மழை

இடி கலந்த
அடை மழை
மாணவர்களின் கவனம்
மழையோடு கலந்தது
அனுப்பி விட்டேன்
மழை ரசிக்க...

ஒரு பிள்ளை மட்டும்
தனி பிள்ளையாய்
ஏதோ கவலையில்..

விழித்தேன்..
விரைந்தேன்..
வினவினேன்..

விடை
கிடைத்ததும்
எங்கள்
இருவர் கண்களிலுமே
கண்ணீர்..

"அம்மா தலைக்கி ஒன்னுமே
கொண்டு போகல சேர்"

எழுதியவர் : கோ.kisokumar (15-Oct-13, 7:23 pm)
Tanglish : mazhai
பார்வை : 93

மேலே