அவளென்ற அவள்

அவளென்ற அவள்

இகந்துழியில் கண்ட இகமலரொன்று
வனப்பெரும் சோலையில்
ஒளிதரும் வீதி உலா

இறவாரமிருந்து காத்துக்கிடக்கையில்
இருள்கொன்ற சலங்கையாள்
புலன் தின்ற விழிப்புகள்

கௌதமி நர்த்தன ஒதிதனிலே
காத்திரிப் புலனெரிவுகள் தந்த
காதல் சிச்சலாட்டங்கள்

குறியாத உழலாட்டங்களோடு
கௌரிச்சிப்பிகள் தலையாட
வீரநடைக் கொண்டன ளாயினும்

இகலியென வெண்ணி விரைந்தனளே
உன் பாதம் நோக்கி யவள்
அவளெனும் நிந்தை கொண்டதாலோ

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (15-Oct-13, 7:06 pm)
பார்வை : 130

மேலே