சென்னையில் ஒரு நாள் ..!

" சுறுசுறுப்பான சென்னை,
அதன்பால் ஈர்குது என்னை..
செந்தமிழும் கொடுந்தமிழ் ஆனது,
நதிகளும் சாக்கடை ஆனது..
மெட்ரோ ரயில் டிராபிக் குடுக்குது,
ரோடு சிக்னல் டென்ஷன் குடுக்குது..
மயிலாப்பூரில் தயிர்சாத பெண்கள்,
சௌகர்பேட்டையில் சேட்டு வீட்டு பெண்கள்..
சென்னை முழுவதும் செந்தமிழ் செல்விகள்,
அனைவருக்கும் உண்டு மனம் கவர்ந்த கள்வர்கள்..
பேசும் தமிழை காதில் கேட்க முடிவதில்லை,
அதனால் தான் பலரும் ஹியட்செடுடன் திரிகின்றனர்..
கல்வி எனும் பெயரில் பணம் பறிக்கும் கொள்ளையர்கள்..
இங்கும் உண்டு வெள்ளை மனம் கொண்டவர்கள்..
பிடித்தவர்களுக்கு அன்பும் வாழ்வும்,
பிடிக்காதவர்களை மிரட்டி விரட்டுது..
தி.நகரில் அலை மோதும் கூட்டம்,
மெரீனாவில் அழைக்கக ஒரு கூட்டம்..
வேலை தேடி அலையுது ஒரு கூட்டம்..
வேலை பிஸியில் குடும்பம் மறக்குதுன் ஒரு கூட்டம்..
இங்கு யார் மேல் தன இல்லை குற்றம்..!

- கைலாஷ் யா..

எழுதியவர் : கைலாஷ் ya (15-Oct-13, 6:36 pm)
பார்வை : 105

மேலே