மாபெரும் சபைதனில் நீ நடந்தால்...

பிறந்தோம், வளர்ந்தோம் பூமியிலே
வாழ்ந்தோமா என்று தெரியவில்லை!!!

உண்பது, உடுப்பது, உறக்கமென்றால்
அதுவே நாளும் வாழ்க்கையில்லை!!!

மனிதனாக வாழ்ந்திடணும் - இதனை
மறந்திடல் என்பது நியாயமில்லை!!!

சொல்லும், செயலும் ஒன்றானால்
உயர்வாய் நீயும் உன் நிலையில்!!!

தாழ்ந்தோர் சரிந்திடில் கரம் கொடுப்பின்
தெய்வமும் தெரியும் உன் உருவில்!!!

வீட்டைக் கடந்தும் சேவை என்றால்
நீ வளர்வாய்... நிறைவாய்... ஊர் மனதில்!!!

வேரே நீரை உரிந்தாலும் - நீ
கனிதரும் கிளையாய் பலன் தருவாய்!!

அன்பாய்... கனிவாய்... ஆதரவாய்...
வாழ்வாய்... வாழ்ந்தால் உலகறிவாய்...

இன்னல்கள் விளைந்த போதினிலும்
தன்னலமின்றி நீ வாழ்ந்தால்
எந்நிலமும் உனைப் போற்றிடுமே!!!

சொன்னவை முறையே நீ நடந்தால்
மாபெரும் சபைதனில் மாலைகளே
மறவாமல் பெறுவாய் இது நிஜமே...

சோதனை கடந்த சாதனையென்றால்
உனக்கு பாடியும் வைப்பார் பாமாலை ..

சாதிக்க பிறந்த பூமியிது
உன் சாதனை என்ன?? கேள்வி தொடு!!!

சாதனை எதுவும் இல்லையென்றால்
எண்ணிக்கை இன்றே துவங்கிவிடு!!!

எழுதியவர் : சொ. சாந்தி (15-Oct-13, 5:13 pm)
பார்வை : 632

மேலே