ஒரு விண்ணோக்கிய பயணம்
சட்டென்றா பூக்கள் பூத்தது
மொட்டாகிப் பின் பூத்தது...!
ஒளி குடித்து முயற்சித்து
ஒரு மனதாய் வளம் பெற்றது...!
பனித்துளியை சேகரித்தே
பாற்கடலை நீ பண்ணலாம்....!
முடியாதது என்று
ஒன்றும் இல்லை - நீ
முயற்சித்துக் கொண்டே இருப்பதே
முன்னேறும் வாழ்வின் எல்லை....!