வேண்டாம் ராசா வெளிநாடு.....!!!

காடு கழனியெல்லாம் விற்று
வந்தது வீசா!

விமானத்தில் பற்ந்தேன்!
என் இதயதிலும் ஒருத்தி பறந்த்தால்!
வந்தடைந்தேன் இளைஞர்களின்
கனவு தேசமாம் ஃகல்ப்!!

பாலை என்றுதான் நான் அரிந்திருந்தேன்!
பார்தேன் ஒரு சோலை!!
என்னவளின் காண்ணீர்துளீகளால்
உருவாகியிருக்குமோ இந்த கார்டன்!!

வானுயர்ந்த பல் கட்டிடங்கள்!
எனினும் என் வானமெல்லாம்
அவள் நினைவல்லவா!!

சுட்டெரிக்கும் சூரியன் என் உடலை சுடலாம்
ஒரு போதும் அவள் நினைவையும்
அவள் மீதான காதலையும் சுடமுடியுமா!!

நான் தங்கியிருப்பது பல அடுக்கு கட்டிடம்!
அவளுடன் தங்கிய குடிசை போல்
தரவில்லை இன்பம்!!

ஏசி அரைதான் என்றாலும்!
அவள் மீதான ஏக்கத்தால்
ஏற்க்கவில்லை நெஞ்சம்!!

வார விடுமுறையில்
வகை வகையான் உணவு-எனினும்
அவள் சமைக்கும் உணவுபோல்
இல்லை சுவை!!

தொலைபேசி ஊடாக தொலைந்து
போகிறது வாழ்க்கை!!

கடிதங்களின் வாயிலாக
காணாமல் போய்விடுமோ
கணவுகள்!!

உறக்கம் தொலைத்து உளருகிறேனடி!
உன் நீனைவால்!!

கனவிலாவது நாம் கலந்து மகிழலாம்
என்றால் கன் மூடியதும் காதோரம்
ஒலிக்கிறது செல்போனின் அலாரம்!!

என்னவளின் ஷ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்களை விட!
செல்போனின் நச்சரிப்பால்
நகர்ந்த நாட்காளே அதிகம்!!

வருடம் ஒருமுறை வாழ வாழ்கை-என்ன
வாடகை பொருளா.....................!!

வேண்டாம் ராசா வெளிநாடு.....!!!

நாதியற்று போனாலும் நாட்டோடு போ....!!!
உறவற்று போனாலும்.............................
ஊரோடு.....போ...!!!

.........ஸ்ரீராம்RAMNAD

எழுதியவர் : ..ஸ்ரீராம்RAMNAD (16-Oct-13, 3:00 pm)
பார்வை : 203

மேலே