தாயும் மகனும்

உணர்வை உருக்கி உயிர் தந்தாள்
உள்ளத்தை துலக்கி உறவு தந்தாள்
உதிரத்தை கலக்கி பால் தந்தாள்
வயிற்றை சுருக்கி உணவு தந்தாள்
கனவுகளை கருக்கி வாழ்வு தந்தாள்
இப்படி முழு மனிதனாய் வாழ
தன்னையே தந்த தாய்க்கு
மனிதா நீ என்ன தந்தாய்.?

எழுதியவர் : சுந்தரேசன் சு (16-Oct-13, 2:53 pm)
சேர்த்தது : சுசுந்தரேசன்
Tanglish : thayum maganum
பார்வை : 101

மேலே