தாயே

ஒரு ஜீவனுக்குள்
இரு இதயத்துடிப்பு
ஓசை தாயே
நான் உன் கருவறையில்
இருந்த போது...

அனால் இன்று
இந்த ஜீவனின்
இதயம் துடிக்க
தாமதிக்கின்றது தாயே
நீ என்னை விட்டு
இருந்திருக்கையில்...

உன் கருவறையில்
நிற்க ஏங்கவில்லை
உன் அருகில் நின்று
சுகம் காண ஏங்குகிறேன்...

மீண்டும் இந்த ஜீவனின்
இதயம் அழகாய் துடிக்கும்
ஓசையை கேட்க
காத்திருக்கிறேன்...

எழுதியவர் : பர்ஹா முனீர் (16-Oct-13, 2:39 pm)
Tanglish : thaayaye
பார்வை : 83

மேலே