ஆசிரியை

உலகில்
ஒன்றான பரம்பொருள் தான்
இரண்டாம் அன்னை
மாதா,பிதா,குருவென்று
மூன்றாம் நிலை பிடித்த
நான்காம் தமிழ் !
ஐந்தாம் வேதமவள் !
ஆறாம் கண்டம் அவள் !
ஏழாம் அறிவு கொண்டாள் !
எட்டாம் பெருங்கடல் தான் !
ஒன்பதாம் திசை வகுத்துப்,
பத்தாம் கிரகம் தேடும்
பாதிரி முகமுடையாள்
பேதம் இல்லா அகமுடையாள் !!

எழுதியவர் : விவேக்பாரதி (16-Oct-13, 3:22 pm)
பார்வை : 500

மேலே