சைபீரிய பறவைகளுக்காக

வந்தாரை வாழ வைக்கும்,
எம் தேசத்திற்கு,
நீ வந்ததால்,
மிஞ்சியது அவமானமே !
எச்சரிக்கையாய்,
சிரங்களை காத்தோம்,
சிறகுகளை இறைத்தோம்,
இரையாக வயல்வெளியில்,
பாயில்லா உறக்கம்,
பாயிலீனால்,
சைபீரியா பறவைகளுக்கு,,,,,

அசைவ பிரியர்களின்,
ஆசைகளும் முடங்கின,
அசைவில்லாத,
சைபீரியாவின் மரணத்தால்,
சிகரம் தொடும் சிறகுகள் ,
பலியானது பாயீலினில் ....

முற்றம் வந்த,
பறவைகள் இரைக்காக !
முற்றாய் போனது,
இரையாக மண்ணிற்கு !

இழப்புகளை மறந்து,
சோகத்தை சுமந்த விழிகள் !
எம் தேசத்தில்,
பறவையென்றாலும்,
உயிரல்லவா! உயர்வானது !

எழுதியவர் : விஜயகுமார்.து (16-Oct-13, 3:29 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 107

மேலே