நீ இல்லா ஓர் நாளில்???(கைப்பேசி)

எப்படி கேட்பேன்
என் அன்னை மொழியை,
நீ இல்லா ஓர் நாளில்?

எப்படி பகிர்வேன்
என் இன்பத்தையும்,துன்பத்தையும்,
நீ இல்லா ஓர் நாளில்?

எப்படி அறிவேன்
இந்திய-பாகிஸ்தான் சமரச செய்தியை,
நீ இல்லா ஓர் நாளில்?

எப்படி அழைப்பேன்
அவசர உதவியை,
நீ இல்லா ஓர் நாளில்?

எப்படி உறவோடுவேன்.
அயல்நாட்டில் அண்ணன்,
நீ இல்லா ஓர் நாளில்?

எப்படி வெல்வேன்
என் தனிமையை,
நீ இல்லா ஓர் நாளில்?

என் நிழலும் இருக்காது
என்னோடு இரவில்...
அப்போதும் என் கையில்
என்னோடு என் கைப்பேசி!!!
இறைவனை வேண்டுகிறேன்
நீ இல்லா ஓர் நாள் வராதிருக்க...?

எழுதியவர் : bhuvanamuthukrrishnan (16-Oct-13, 4:45 pm)
பார்வை : 272

மேலே